அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அதன்படி அவர்கள் கட்சிக்குள் வகித்திருந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் ஊடக அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாத்திரமே மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் அதனை மீறி அரசாங்கத்தில் பதவி ஏற்றால் கட்சியின் சகல பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.