இலங்கையின் தடகள வீரர்களின் முன்னேற்றுவதற்கான தனது முயற்சிகளை இறுதி வரை கைவிடப் போவதில்லை என இலங்கையின் தடகள வீரர் யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.
´தெரண டோக் வித் சத்துர´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த யுபுன் அபேகோன்,
“இலங்கையில் உள்ள நமது விளையாட்டுத் தொழில்நுட்பத்திற்கும் உலகில் உள்ள விளையாட்டுத் தொழில்நுட்பத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
நாட்டில் விளையாட்டைப் பொறுத்த வரையில் எந்த வேலைத் திட்டமும் இல்லை. வாரத்தில் 6 நாட்கள் காலையிலும் மாலையிலும் நான் அங்கு பயிற்சி செய்கிறேன். நிறுவனங்கள் பெரும்பாலும் இல்லை. குறித்த விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவதன் மூலம் தங்கள் பிரேன்டை மேலும் பிரபலமடைய வைக்கலாம் என அவர்கள் நினைப்பது இல்லை.
மேலும், யாராவது ஒருவர் முன்னோக்கி செல்லும் போது, அவர்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும், அதை நான் மட்டும் செய்தால் போதாது.
பாடசாலையில் விளையாடும் இந்த இளம் தலைமுறையினர் ஒரு நாள் குறித்த இடத்துக்கு வரும்போது, என்னால் அதைக் கட்டத்தை எட்ட முடியுமானால். அது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக மாறும் என நினைக்கிறேன்´´ எனவும் அவர் குறிப்பிட்டார்.