கடுமையாக பசி எடுக்கும் போது நாம் கண் முன் இருக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடுகின்றோம். ஆனால் மருத்துவர்களின் ஆசைப்படி சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அவ்வாறு நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் எவையென பார்ப்போம்.
கடுமையான பசியில் இருக்கும் போது நம் முன் என்ன உணவு இருக்கிறது என்பது கூட தெரியாமல் வேகமாக சாப்பிடுவோம்.
அதனால்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் எனச் சொல்கிறார்களோ என்னவோ? ஆனால் பசி எடுக்கும் போது சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும் அப்படியே மீறி சாப்பிடால் செரிமானப் பிரச்சனை வரும் எனவும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
பசியை போக்க தினமும் பலர் வெறும் வயிற்றில் ஆரோக்கியமானது என நினைத்து சில உனவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் அது அவர்களின் உடல்நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.
கொய்யா
கொய்யாவில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல நன்மைகள் இருந்தாலும் இதை வெறும் வயிற்றில் (குறிப்பாக காலையில்), அதுவும் குளிர்காலத்தில் சாப்பிடாதீர்கள். மீறி சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். அதுவே கோடை காலத்தில் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிட்டால் அது உங்களுக்கு நன்மையையே தரும்.
ஆப்பிள்
குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் ஆப்பிள் பழம் சாப்பிடால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலையில் எழுந்ததும் எதுவும் சாப்பிடாமல் முதல் வேளையாக ஆப்பிள் பழம் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்தப் பிரச்சனையை நிச்சியம் சந்திப்பீர்கள். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
டீ அல்லது காஃபி
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ, காஃபி குடிப்பதுதான் பலரின் வாடிக்கையாக இருக்கிறது. வெறும் வயிற்றில் இந்த பானங்களை குடிக்காதீர்கள். இல்லை, என்னால் டீ குடிக்காமல் இருக்க முடியாது என்று சொன்னால், கூடவே பிஸ்கட், பிரெட் ஆகியவற்றை சாப்பிடுங்கள். கடுமையான பசியில் அல்லது வெறும் வயிற்றில் டீ, காஃபி குடித்தால் வயிற்றில் வாயுக்கள் அதிகரிக்கும்.
தக்காளி
புளிப்பு சுவை நிறைந்த தக்காளியை குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். ஆனால் கோடை காலத்தில் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.
தயிர்
தயிரை அளவாக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் ஒருபோதும் இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள். இல்லையென்றால் உங்கள் உடல்நிலை பாதிக்கப்படும்.
வெள்ளரிக்காய்
வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இன்றே அந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள். வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதோடு வேறு சில பிரச்சனைகளும் வரக்கூடும்