கடினமான வேலை மோசமான வாழ்க்கை முறை தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் மற்றும் திருமண பிரச்சினைகள் என நம்மை தொந்தரவு செய்யும் அனைத்து விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் மனஅழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
வேலை, பள்ளி, கல்லூரி, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றுக்கும் இடையில் மன அழுத்தத்திற்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களும் சிக்கல்களும் ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
சில சமயங்களில் இந்த மன அழுத்த நிலைகள் நீண்ட காலம் நீடிக்கும். நீண்ட காலம் மனஅழுத்தத்துடன் வாழும் போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
நீடித்த மன அழுத்தம் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.மன அழுத்தம் நிறைந்த எண்ணங்கள் நல்ல இரவு தூக்கத்திற்கு மோசமான தடையாக இருக்கும்.
தொடர்ச்சியாக மனஅழுத்தத்தில் இருக்கும் ஒரு நபரால் நன்றாக தூங்க முடியாது அல்லது மிகவும் ஒழுங்கற்ற மற்றும் தொந்தரவு நிறைந்த தூக்க சுழற்சியால் பாதிக்கப்படுவார்கள்.
உயர் இரத்த சர்க்கரை
மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் வெளியீடுகளைத் தூண்டுகின்றன. இது உங்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை உண்டாக்கும்.
நீங்கள் நீண்டகால மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் உடலால் இந்த கூடுதல் குளுக்கோஸ் உயர்வை சமாளிக்க முடியாமல் போகலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
மாரடைப்பு
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது உங்கள் இதயமும் வேகமாக துடிக்கிறது. மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த நாளங்களை சுருக்கி உங்கள் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜனை திருப்பி விடுகின்றன.
எனவே நீங்கள் அதனை சமாளிக்க அதிக அழுத்தத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும் ஆனால் இது உங்கள் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
வயிற்று உபாதைகள்
ஹார்மோன்களின் அவசரம், விரைவான சுவாசம் மற்றும் அதிகரித்த இதய துடிப்பு ஆகியவை உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைக்கும்.
வயிற்றில் அமிலம் அதிகரிப்பதால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீடித்த மன அழுத்தம் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.
மாதவிடாய் கோளாறு
பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருப்பது மாதவிடாய் சுழற்சியை தொந்தரவு செய்யலாம். மன அழுத்தம் காரணமாக வெளியிடப்படும் ஹார்மோன்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் மனஅழுத்தம் எல்லையைக் கடக்கும் போது அது முற்றிலும் மாதவிடாயை நிறுத்தலாம்