கனடாவின் வான்கூவரில், கடற்கரை ஒன்றில் இறந்துகிடந்த நபர் ஒருவர் முன் பொலிசார் செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீடியோகிராபரான Zachary Ratcliffe என்பவர் வான்கூவரிலுள்ள Third Beach என்ற கடற்கரை ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே சில பொலிசார் சிரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
சற்று அருகே சென்று பார்க்கும்போது, அங்கே இறந்த ஒருவரின் உடல் கிடப்பதையும், அதன் அருகே பொலிசார் இருவர் சிரித்தபடி நின்று செல்பி எடுத்துக்கொண்டிருப்பதையும் கவனித்த Zachary கோபமடைந்துள்ளார்.மேலைநாடுகளில் இறந்த உடல்களை அவமதிப்பது பெருங்குற்றமாகும். உடனே இந்த விடயத்தை வெளிக்கொண்டுவர முடிவு செய்த Zachary, அந்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்கலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த பொலிசார் இருவர் மீதும் விசாரணை துவங்க உள்ளது.