சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,082 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவற்றுள் கண்டி, மத்தளை மற்றும் குளியாபிட்டி பகுதிகளிலேயே அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 40,674 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பின் வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையில் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக 12 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.