கடந்த மே மாதம் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனைத் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
அதேவேளை , அமரகீர்த்தி அத்துகோரளவுடன் கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்