இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் 5வது நாளாக மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு பொதிகளை தனிநபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் இப்போது அதிகம் பேசப்படுவதால், ஒரு கடந்த கால காலிமுகத்திடல் போராட்ட நினைவு கூறப்பட்டுள்ளது.
1956இல் பண்டாரநாயக்க (S. W. R. D. Bandaranaike) பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா நடத்திய அஹிம்சை அறவழிப் போராட்டம்.
பின்னர் அரசாங்கம் வன்முறையைக் கட்டவிழ்த்து இந்தப் போராட்டத்தைக் கலைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.