கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில் நேற்றிரவு இரவு சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இவரும் பல திரைப்படங்களுக்கு ஒரு இசை அமைத்துள்ளார்.திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்துள்ளார்.
இவரது மகன்கள் வெங்கட் பிரபு, நடிகர் மற்றும் இயக்குனராக உள்ளார். அதே போன்று இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை ( வயது 69) . உடலநலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 11 :30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அம்மா நமக்கு எவ்வளவு “பலம்”. பல நேரங்களில் அப்பாவுக்கும் நமக்கும் “பாலம்”. உங்களுக்கு அம்மா எவ்வளவு பலம் என்பதறிவேன். உணர்வால் அம்மாவோடு மிகவும் பிணைக்கப்பட்டவர் என்பதை கடந்த ஒருவாரமாகப் பார்த்து வருகிறேன். எப்படியாவது மீண்டு மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன் என தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.