இன்னும் ஓரினச்சேர்க்கை, திருநங்கை இந்த இரண்டுக்குமே வித்தியாசம் புரியாத, பல படித்த மேதைகள் இங்கே உண்டு. ஓ ரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் என எப்படி இருந்தாலும், மனிதர்கள் மனிதர்களே என்று உணர்ந்தவர்களும் இங்கு இருக்கின்றனர், அப்படிப்பட்ட எத்தனையோ நண்பர்கள் எங்கள் நட்பு வட்டாரத்திலும் உண்டு. அவர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இணைந்து ஊர்சுற்றி இருக்கிறோம். பலர் தெரிந்தும், தெரியாமலும் கூட நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
நான் ஒரு ஓ ரினச்சேர்க்கையாளன், நான் ஒரு தி ருநங்கை என்பதை வெளியில் சொல்லாமலே பலரும் இருக்கிறார்கள். ஒரு சிலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளியில் சொல்கிறீர்கள். அப்படி வெளிப்படையாக நடந்து கொள்பவர்கள் மீது முன்வைக்கப்படும் சிலருடைய கருத்துகள், மனதைக் கா யப்படுத்தும். யாரோ சிலர் மோசமாக நடந்துகொள்வதால், எல்லாரையும் அ சிங்கமா பார்க்கிறார்களே என்ற ஆதங்கம் நம் சமுதாயத்தின் மீது அவர்களுக்கு உண்டாகிறது.
ஒரு ஓ ரினச்சேர்க்கை உணர்வுடைய ஆண், இன்னொரு ஆண் மீது காதல் கொள்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக, அவனை ஆ ண் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு தான் இந்த சமுதாயம் வளர்ந்திருக்கிறது. ஓ ரினச்சேர்க்கை உணர்வுடைய ஆணாக இருந்தாலும், மேன்லி ஆண்களாக தான் இருக்கின்றனர். அது நிறைய பேருக்கு தெரியாது. கடைசியாக வெளியான காஞ்சனா படத்தில் கூட, ஓ ரினச்சேர்க்கை உ ணர்வை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், காமெடி என்ற பெயரில் வ க்கிரமாக உட்புகுத்தப்பட்டுள்ளது.
ஓ ரினச்சேர்க்கை இ யற்கைக்கு பு றம்பானது என்றால், அந்த உணர்வு அவர்கள் மனதில் வர வைப்பதும் இயற்கையாக உண்டாகும் ஹா ர்மோன் கோளாறு தானே? இதனை உணர்வு ரீதியாக புரிந்து கொண்ட பல நாடுகள், ஓ ரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கிவிட்டன. இந்தியாவில் ஓ ரினச்சேர்க்கையை சாதரணமாக எடுத்துக்கொள்வதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும். ஆனால் அந்த உணர்வு கொண்டவர்களை த வறான நோக்கில் பார்க்க வேண்டாம் என்பதை உணர்த்தவே இந்த பதிவு.

