சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
இதன்போது, நான் அரசியலில் இருக்கவும் தயார், ஓய்வு பெறவும் தயார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை என கூறினார்.
அத்துடன் அரசாங்கத்துக்கு முடியவில்லை என்றால், நாங்கள் முறையாக பொறுப்பு ஏற்க தயார். அவ்வாறு செய்யவேண்டுமாயின், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.