சிவப்பு அபாய வலயமாகியுள்ள இலங்கை – ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 உயிரிழப்பு!!
இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் டெல்டா வைரஸ் பரவும் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே பொது ஒன்றுகூடலை உடனடியாக நிறுத்தி, வீடுகளில் கூட ஒன்றுகூடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். அத்துடன் நாடு தற்போது சிவப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.