வாத்துவை பிரதேசத்தில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் 200 கிராம் ஹெரோயினுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்வத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முகத்துவாரம், மட்டக்குளி பிரதேசத்தில் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத மதுபான குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேரும், போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், துப்பாக்கியுடன் ஒருவருமாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு பூராகவும் சுமார் 130 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.