தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதத்தில் நிரோஷன் பிரேமரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த மாதம் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, கட்சியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கடிதம் மூலம் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.