மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் இரு விமானங்கள் வானில் வட்டமிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கன மழைக் காரணமாக குறித்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரூவில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்ட இண்டிக்கோ நிறுவனத்திற்கும் சொந்தமான இரண்டு விமானங்களே இவ்வாறு சுமார் ஒரு மணித்தியாலமாக வானில் வட்டமிட்டுள்ளன.
மேலும், சமீப நாட்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல விமானச் சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.