ஒடிசாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வனச்சரக அதிகாரிகள் பாம்பு விஷம் கடத்தும் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
புவனேஸ்வர் மாவட்ட வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், பாம்பு விஷம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு பெ ண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொடிய பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் பாம்பு விஷம் வாங்குபவர்களை போல வனத்துறையினர் நாடகமாடி பாம்பு விஷம் கடத்தும் கும்பலை கைது செய்திருப்பதாக தெரியவந்துள்ளது