நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டடுள்ள அறிக்கையில், ëமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 39 கோடியே 59 இலட்சத்து 21 ஆயிரத்து 220 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 38 கோடியே 7 இலட்சத்து 68 ஆயிரத்து 770 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளனí எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.