தலைமன்னார் – பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பெசாளையில் அமைந்துள்ள குறித்த வீட்டின் அலுமாரியில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ 240 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட ஐஸ்போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த வீட்டிலிருந்து 24 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை பேசாலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.