நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவு திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைகள் என்ற திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய 14,021 கிராம சேவையாளர் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பொது மக்களின் தேவைகளை அடையாளம் காணும் செயல்முறை முழுமையாக பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தை 2022 பெப்ரவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை பரிசீலிக்கிறது.