யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்போர் ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இதனால் கடவுச்சிட்டுக்காக கைவிரல் அடையாள வைக்க செல்லும் மக்கள் அலைச்சல், நேரவிரயம் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகள் ஊடகங்கள் ஊடாக இது குறித்து அறியப்படுத்தியிருந்தால் கூட தாம் இது போன்ற சிரமத்தை எதிர்கொள்ளவேண்டி இருந்திருக்காது எனவும், தாம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தைத் தெரிவு செய்து இருப்போம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இயந்திரம் எப்போது சீராகும் எனக்கேட்டால், கொழும்பில் இருந்து தொழிநுட்பவியலாளர்கள் வர வேண்டும் என்றும் அதுவரை இது எப்போது சரிசெய்யப்படும் எனத் தம்மால் தெரிவிக்க முடியாது எனவும் அதிகாரிகள் அசமந்தமாக தெரிவிப்பதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.