ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்த கடும் மழை பெய்துள்ளதாகவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்
இதன்படி, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் வேண்டு கோல்
மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் (குறிப்பாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள்) மற்றும் ஆற்றுப்படுகைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சரிந்து விழும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.