சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
நேற்றையதினம் (05-05-2024) தர்மசாலாவில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி இடம்பெற்றன.
இந்த போட்டியில் சென்னை அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு முன்பு 149 பிடியெடுப்புகளை தோனி எடுத்திருந்தார்.
நேற்றையப் போட்டியில் அவர் 150வது பிடியெடுப்பை எடுத்திருந்தார்.
இந்தப் பட்டியலில் 144 பிடியெடுப்புகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மேலும் RCB அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 118 பிடியெடுப்புகளுடன் மூன்றாம் இடத்திலும், விராட் கோலி 113 பிடியெடுப்புகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஸ் ரெய்னா 109 பிடியெடுப்புகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்த வீரர்கள் ஐபிஎல் வாழ்க்கை முழுவதும் தங்களின் விதிவிலக்கான களத்தடுப்பு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன் அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர்.