இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் (António Guterres)தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்வவேண்டுமானால் சாதகமான சூழலாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாகவும் மாறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் (António Guterres) இதனை குறிப்பிட்டுள்ளார்.