இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மற்றும் புதைபடிவ எரிபொருளினால் ஏற்படும் தீமைகளை குறைக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) தனது ஆதரவை வழங்கும் என்று கூறியுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் UNDP யின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை போக்குவரத்து அமைச்சில் ஆரம்ப கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப கலந்துரையாடல்
இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் உள்ளன என்பதோடு எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுவதோடு மின்சார முச்சக்கர வண்டிகளில் பயணிகள் குறைந்த விலையில் பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
UNDP ஆல் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட e-Mobility திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 300 முச்சக்கர வண்டிகளை மாற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
UNDP திட்டத்திற்காக 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பில் மின்சார பெருத்து சேவையை ஆரம்பிக்கவும் கவனம் செலுத்தப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
அதன் மூலம், சட்டத்தில் திருத்தம் செய்யவும், கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், அபராதம் விதிக்கவும் என்டிசி அதிகாரம் பெறும். எதிர்காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்படும் முச்சக்கர வண்டிகளின் பதிவும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.