ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை தொடங்குவதற்கான பொறிமுறையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகிய இரண்டும் பொதுக் கொள்கை கட்டமைப்பின் கீழ் இணைந்து பணியாற்றக் கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டிணைவில், இரு கட்சிகளும் தமது தனித்துவமான அடையாளங்களைப் பேணிக்காக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பார் என்றும், தலைமைப் பதவி குறித்து எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார் தெரிவித்துள்ளார்.