மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்றையதினம் (26) முற்றுகையிட்டபோதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதான பெண் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இதன்போது அந்த பெண்ணிடம் இருந்து 5350 மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஏறாவூர் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபரை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

