எவ்வளவுதான் பசித்தாலும் சிங்கங்கள் ஒருபோது புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதோடு தன்னிடமிருந்து பட்டப்படிப்பு சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் உரிமை எனவும் தேரர் குறிப்பிட்டார். அதில் எந்த தவறும் இல்லை என்பதுடன், தனக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார்.