எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது.
குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் அலுவலகங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவை எதிர்வரும் 17 முதல் 20ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.