மின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் (Tesla) பிரித்தானியாவில் மின் வழங்கல் துறையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
‘Tesla Electric’ எனப்படும் இந்த திட்டம், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடி மின்சாரம் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இப் புதிய திட்டத்தின் கீழ், Tesla நிறுவனம் சோலார் பேனல்கள், ‘Powerwall’ எனப்படும் மின்சாரம் சேமிப்பு உபகரணங்கள், மற்றும் மின் விநியோக வலைப்பின்னலை ஒருங்கிணைத்து, நுகர்வோருக்கு குறைந்த செலவில், சுத்தமான பசுமை ஆற்றலை( Green energy) வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மின் கட்டணச் செலவை குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கான பாதிப்பையும் குறைக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இத்திட்டம் முதலில் சில பகுதிகளில் சோதனை ரீதியில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் டெஸ்லா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

