அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.