அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை பெரும்பாலும் இன்று குறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.