தனது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 212 லீற்றர் டீசலுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகரசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருளை அவர் பதுக்கி வைத்திருந்தாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் நீண்டநேரமாக காத்திருந்தே எரிபொருளை பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.