மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையினூடாக இந்நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு அதிகபட்ச வசதிகளை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் விலை திருத்தம் காரணமாக தொழில் துறையினர் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கைத்தொழில்துறையினர், நாளாந்த மின்வெட்டு, மின்சார விலை திருத்தம் மற்றும் எரிபொருள் தொடர்பான விடயங்களை எரிசக்தி அமைச்சரிடம் முன்வைத்ததாக கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.