மதுரை மருத்துவக் கல்லூரியில் MS மயக்கவியல் படித்துவந்த தஞ்சாவூரை சேர்ந்த மருத்துவர் மற்றும் மாணவி ஹரி ஹரிணி, கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவருக்கு வந்த லேசான காய்ச்சலும் உடல் வலியும் (Myalgia) இயல்பானது என்று மருத்துவர் விஜய் குர்ஜார் தெரிவிக்கிறார். ஆனால் மாணவியின் கணவர், அசோக் விக்னேஷ், அதே கல்லூரியில் MD படிப்பவர், மனைவிக்கு உடல் வலியைக் குறைக்க Diclofenac ஊசி போட்டுள்ளார்.
Anaphylaxis என்ற அதீத எதிர்வினை உண்டானதால் கடந்த சனிக் கிழமை மீனாட்சி மிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக் கிழமை ஹரி ஹரிணி உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், சிறிது காலம் வேறு எந்த ஊசி/மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். மாணவியின் வயது 26, 2016 இல்தான் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் MBBS முடித்துள்ளார். திருமணமாகி 4 மாதங்களே ஆகியுள்ளது