தமிழகத்தில் சுயட்சை வேட்பாளர் ஒருவர் என்னை ஜெயிக்க வைத்தால், 20 லட்சம் ரூபாய் வீடு, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ஒரு கோடி ரூபாய், ஐபோன் போன்றவை கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், தங்கள் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான துலாம் சரவணன் அவர்களின் வாக்குறுதி பட்டியல் இணையத்தில் அதிகவேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், நீங்கள் எனக்கு அளிக்கும் வாக்குகள், சட்டமன்றத்தில் உங்களுக்காக ஒலிக்கும் என் வார்த்தைகள், நமது நேர்மையின் சின்னம் குப்பைத்தொட்டி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறிப்பாக, அனைவருக்கும் இலவச ஐபோன், மக்கள் அனைவருக்கும் நீச்சல்குள வசதியுடன் 3 மாடி வீடு, வீடு ஒன்றிற்கு ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும்,
அனைத்து வீட்டிற்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், ஒவ்வொரு வீட்டிற்கு சிறிய வகை ஹெலிகாப்டர், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகைகள் போன்றவை என பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.