தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 மற்றும் எஸ் கே 25 என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் எஸ்கே 23 படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 25 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை வெறுப்பவர்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் “என்னை நேசிப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதே போல் என்னை வெறுப்பவர்களும் சிலர் இருக்கின்றனர். நான் சினிமாவில் என்ன செய்கிறேன் என அவர்கள் கேட்பார்கள். என்னுடைய வெற்றி அவர்களுக்கான பதிலடி கிடையாது. என்னுடைய வெற்றி என்னை நேசிக்கும் எனது ரசிகர்களுக்கு தான்”.
“சமூக வலைத்தளத்தில் உள்ள குறிப்பிட்ட சில குரூப், என்னுடைய படம் தோல்வியடைந்தால் என்னை கடுமையாக அடிப்பார்கள். படம் வெற்றியடைந்துவிட்டால் என்ன தவிர மற்றவர்களை பாராட்டி பேசவார்கள்” என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.