எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் விகாரைக்கு நேற்று (27) விஜயம் செய்த போதே மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
மகா போதி வழிபாடு
வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச, அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரர் பார்வையிட்டார்.
பின்னர், ருவான்வெளி மகா சாயியை வழிபட்ட மகிந்த ராஜபக்ச, ருவன்வெளி சைத்தியராமதிகாரி வணக்கத்துக்குரிய ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்தார்.
வழிபாட்டை அடுத்து தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த மஹிந்த , தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருப்பதாகவும் கூறினார்.