எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்பய்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ள தனது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவிற்கு ராஜாங்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக தெற்கு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.