எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் (S.E.Schalk) இடையிலான சந்திப்பு ஒன்று அன்மையில் எதிர்க்கட்சித் தலைவர்அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. குறிப்பாக, இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு உயர்ஸ்தானிகரிடம்எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் கொழும்பிலுள்ள இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் அன்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன்எஸ்கடெல் அம்மையார் ஆகியோர் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று எதிர்க்கட்சித் தலைவர்அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. குறிப்பாக, இலங்கைதற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பையும், ஆதரவையும்வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஜனநாயக கட்டமைப்புகளை பாதுகாப்பது, மக்கள் நல மேம்பாட்டு முன்னெடுப்புகளான மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்ட முன்வருகைகளுக்காக தமது பாராட்டுக்களையும் தூதுவர் இதன் போது தெரிவித்தார்.