மனித குலத்தினரிடையே நல்லிணக்கத்திற்கும் சகவாழ்விற்கும் வழி வகுக்கும் புனிதமான நாளாக மகா சிவராத்திரி தினத்தை அழைக்கலாம்.
இந்து மதத்தின் பிரகாரம், உலகின் மிக சக்திவாய்ந்த கடவுள் தான் என்பதை சிவபெருமான் உலகுக்கு எடுத்துக்காட்டிய புனிதமான நாளாகவும் மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது.
உலகில் மூன்றாவது பெரிய பக்தர்களைக் கொண்ட இந்து மதம் உலகின் மிகப் பழமையான மதம் என்று நம்பப்படுகிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
கி.மு 200-300 க்கு இடையில் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்திலும் இந்து மத நம்பிக்கைகளின் சான்றுகள் கிடைத்துள்ளன.அப்பேர்பட்ட பக்தர்களின் விசேட சமய தினமாக சிவராத்திரி தினத்தை அழைக்கலாம்.
மனிதனில் குடிகொண்டுள்ள அகங்காரமும், அகந்தையும் ஒழிந்து தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் மாற்றுவதற்கு இது வாய்ப்பளிப்பதாக சிவ பக்தர்கள் நம்புகின்றனர்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திகதியில் மகா சிவனுக்காக இருக்கும் இரவு விரதத்தால் இருள் நீங்கி ஞான ஒளி வீசச் செய்யட்டும்.
மகா சிவராத்திரி தீபத்தின் ஒளி முழு இந்து மக்களின் ஆன்மாவையும் ஒளிரச் செய்வது போலவே, அனைத்து மனித இதயங்களிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி நிலைகொள்ள சிவபெருமானின் ஆசீர்வாதம் கிட்டட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்