இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால் உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்ட இளநீர் விலை இன்று 200 ரூபாயை தாண்டியுள்ளது.
மேலும் ஒரு இளநீர் வெளிநாட்டவருக்கு 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.