நாடு முழுவதும், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தளர்த்தப்படும் காவல்துறை ஊரடங்கு சட்டமானது, பின்னர் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு, நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது