இலங்கை அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காலி முகத்திடல், ஜனாதிபதி அலுவலகம், நாடாளுமன்ற வீதி உட்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை அன்று தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று கொண்டார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய நிலையில் அவரின் பாதுகாப்பு கருதி திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் முகாமிற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கடற்படை தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அவர் பதவி விலகி ஒரு வாரம் முடியவுள்ள நிலையில், இதுவரையில் எந்த ஊடங்களிலும் மஹிந்த தொடர்பில் ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவர் திருகோணமலையில் தான் தங்கிவுள்ளாரா? அல்லது வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளாரா என இலங்கையில் உள்ள ஊடங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.