உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள் பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு திகதி அறிவித்த நிலையில் அது பிற்போடப்பட்டிருந்தது.
எனினும் தேர்தலை நடத்துமாறும் அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில் தேர்தல் தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.