தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (28.12.2023) மரணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் (27.12.2023) அதிகாலை வேளையில் மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மியார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது நடிகர் விஜயகாந்த் இற்கு கொரோனாத் தொற்று என உறுதிசெய்யப்பட்டு மருத்துவ முடிவுகள் வெளியிடப்பபட்டிருந்தன.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் வீட்டிற்கு முன் தொண்டர்களும் இரசிகர்களும் கதறி அழுது தன்னுடைய கவலையை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.