உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது.
மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக, கடந்த 2019 இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
முதல் முறையாக, ஆப்ரிக்காவைச் சோ்ந்த சிறுவா்கள், மலேரியா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இருக்கிறாா்கள். ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறினாா். மலேரியாவைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மந்தமாகியிருந்த நிலையில், தடுப்பூசி வந்திருப்பது அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது