அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6 வந்துவிட்டது.
நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
விமர்சனங்கள் எல்லாம் அட்டகாசமாக வர பாக்ஸ் ஆபிஸிலும் படம் கலக்கி வருகிறது. படத்தில் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட், அஜித்தின் ஆக்ஷன் படத்தை சூப்பராக கதைக்களம் அமைய நிறைய நல்ல விமர்சனங்கள் வருகிறது.
சென்னையில் மட்டுமே முதல் நாளில் படம் ரூ. 2.3 கோடி வசூல் வேட்டை நடத்த உலகம் முழுவதும் படம் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.