யாழ்.காரைநகர் கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் இரவு யாழ்பாணம் காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல் யாழ்ப்பாணத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை சுமார் 7 மணியளவில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் முறையாக இலங்கை கடற்படையினரிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பிற்பகல் இந்திய அதிகாரிகளிடம் ராஜ்கிரண் உடல் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.