இந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் ரியாவிடம், நீ உண்மையிலேயே என்னை காதலிக்கிறாயா? உன்னுடைய உண்மை காதலை நிரூபிக்க விஷம் குடிப்பாயா என கேட்டுள்ளார்.
இதையடுத்து பக்குவம் அடையாத சிறுமியான ரியா காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் விஷம் குடித்திருக்கிறார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.