உதவி பெற்றவர்:பட்டுராஜா ஜெசி
உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா அவர்களின் பிள்ளைகள்.
உதவித்தொகை:140,000
இன்றைய கொடுப்பனவு பயனுள்ளதாகவும் மனதுக்கு திருப்தியாகவும் உள்ளது.இரண்டு சகோதரர்கள் எம்மினத்துக்காக தம்முயிர்களை அற்பணித்துள்ளார்கள். மேலும் ஒரு சகோதரன் வீதி விபத்தில் இறந்துவிட தனது வயதான பெற்றோருடன் வாழ்ந்துவரும் 39 வயது நிரம்பிய செல்வி ஜெசி அவர்கள் தனக்கு தையல் தெரியும் தனக்கு ஓர் தையல் நிலையம் அமைத்து தரும் படி கேட்டதற்கிணங்க டென்மார்க்கில் வசிக்கும் திரு மார்க்கண்டு ஐயா அவர்களின் பிள்ளைகள் முன்வந்து இந்த உதவியினை முழுமையாக வழங்கியுள்ளார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல… அத்துடன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஒழுங்கு படுத்திய எமது உறுப்பினர் திருமதி இந்துராணி மற்றும் திரு சஜீவன் அவர்களுக்கும் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்ட கிராமசேவையாளர் திரு சு.கஜன் மற்றும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் தையல் நிலையத்தினை திறந்து வைத்துள்ளார். மேலும் எமது நாச்சிக்குடா மகளிர் அணியினருக்கும் அத்துடன் உதவிகள் வழங்கிய இளைஞர்களுக்கும் இந்த உதவியினை ஏற்பாடு செய்து தந்த திருமதி வேணி சிறிதரன் (இலண்டன் மகளிர் அணி பொருளாளர் ) அவர்களுக்கும் நன்றி.